Siragadikka Aasai: முத்துவிடம் சிக்கிய ஆதாரம்! திகைத்து நிற்கும் மனோஜ் ரோகினி
சிறகடிக்க சீரியல் காட்சியில் மனோஜ் குறித்த ஆதாரம் ஒன்று முத்துவிடம் சிக்கியுள்ள நிலையில், அதனை வைத்து முத்து மிரட்டியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.
முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இளையமகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு மூத்த மகன் முத்துவை பிடிக்காமல் போயுள்ளது.
இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.
முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.
முத்துவிடம் சிக்கிய ஆதாரம்
முத்து, அப்பாவிற்கு நல்ல பிள்ளையாக இருந்து வரும் நிலையில், தற்போது மீனாவின் தம்பி சத்யா, முத்துவின் தம்பி மனைவி சுருதியின் தந்தை செய்த சதியால் பிரச்சினையில் சிக்கிய நிலையில், மீனா அதிலிருந்து முத்துவை மீட்டுள்ளார்.
இந்நிலையில் மனோஜ் ஜீவாவிடம் இருந்து பெறப்பட்ட பணத்தை வைத்து புதிய தொழில் ஆரம்பிக்கும் நிலையில், அதற்கு பெயர் வைப்பதற்கான பேச்சு அரங்கேறியுள்ளது.
இதில் விஜயாவின் பெயர் வைக்க வேண்டும் என்று மனோஜ் கூறியதை ரெக்கார்டு செய்த முத்து அதனை வைத்து அம்மாவின் பெயரை வைக்கவில்லை என்றால் குறித்த ரெக்கார்டை காட்டுவதாக மிரட்டியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |