Siragadikka Aasai: மீனாவை நேருக்கு நேர் சந்தித்த முத்து! வீட்டிற்கு வந்த புது ஆள் யார்?
சிறகடிக்க சீரியலில் முத்து மீனா இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பார்வையால் வார்த்தையால் பரிமாறிய நிலையில், மனோஜ் வீட்டிற்கு புதிய ஆள் ஒன்றினை அழைத்து வந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை ரசிகர்கள் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
தற்போது முத்து மீனா இருவரும் பிரிந்து இருக்கின்றனர். இதுவரை ஒன்றாக இருந்தவர்கள் தற்போது பிரிந்திருப்பது போன்று கதை செல்கின்றது.
மீனாவை வேலைக்காரி என்று கூறிய விஜயாவிற்கு முத்து சரியான பதிலடி கொடுத்து அவ என் பொண்டாட்டி என்று கூறினார்.
இந்நிலையில் மீனா வீட்டில் இல்லாமல் சமையல் செய்து சாப்பிட அனைவரும் கஷ்டப்படுகின்றனர்.
ரோகினி மனோஜ் ரொமான்ஸ்
ரோகினி மனோஜ் இருவரும் கடையில் ரொமான்ஸ் செய்துவரும் போது ஒரு தம்பதி உள்ளே வந்து உதவி கேட்கின்றனர்.
அதில் குறித்த பெண்ணை தனது வீட்டிற்கு சமையல் வேலைக்கு அழைத்து செல்ல ரோகினி முடிவு எடுத்தார்.
அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து சமையல் செய்து கொடுத்த நிலையில் வீட்டில் அனைவரும் அலறித் துடித்துள்ளனர்.
நேருக்கு நேர் சந்தித்த முத்து மீனா
மீனா முத்துவிற்காக சமைத்து அவரது நண்பர்களிடம் கொடுத்துள்ள நிலையில் மீனாவின் நினைவாகவே அதனை முத்து ரசித்து சாப்பிட்டுள்ளார்.
பின்பு காரில் வந்து கொண்டிருக்கும் போது மீனாவையும், அவரது தோழியையும் சந்தித்த நிலையில், இருவரும் கண்ணால் பேசிக் கொள்கின்றனர்.
மீனா முத்து மீது கோபமாகவே இருக்கின்றார். கடைசியாக அனைவரையும் இறக்கிவிட்ட பின்பு மீனா முத்து கூப்பிடவில்லை என்று கோபத்தில் இருக்கின்றார்.
முத்து மீனா வீட்டுக்கு வருவதாக கூறுவதில்லை என்று கூறி இருவரும் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர். இருவரும் இவ்வாறு பிரிந்திருப்பதை பார்க்க முடியாத ரசிகர்கள் சீக்கிரம் ஒன்று சேர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |