சரோஜா தேவியின் கணவரை பார்த்துண்டா? அழகான தம்பதியின் புகைப்படம் வைரல்
மூத்த நடிகை பி. சரோஜா தேவியின் மறைவுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்கள், இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பெங்களூருவில் 87 வயதில் இவர் இன்று காலமானார்.
சரோஜா தேவி
கன்னட சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டவர் தான் சரோஜா தேவி. அவர் கன்னடத்து பைங்கிளி என ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்டவர்.
மேலும் கன்னட மொழியில் அறிமுகமான பிறகு, சரோஜா தேவியின் புகழ் மற்ற துறைகளுக்கும் பரவியது. பல தசாப்தங்களாக நீடித்த தனது வாழ்க்கையில், சரோஜா தேவி திலீப் குமார், என்.டி.ஆர், எம்.ஜி.ஆர் மற்றும் பல திரைப்பட ஜாம்பவான்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார்.
சரோஜா தேவி 1955ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின் தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
எம்ஜிஆர் உடன் 26, சிவாஜி உடன் 22
'நாடோடி மன்னன்' தொடங்கி 'அரசகட்டளை' வரை எம்ஜிஆருடன் மட்டும் 26 படங்களில் ஜோடியாக நடித்த பெருமை இவரையே சாரும்.நடிகர் சிவாஜி உடன் மட்டும் 22 படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், தெலுங்கில் என்டி ராமாராவ், ஏ நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப் படங்களை தந்தார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் 2020ல் கன்னடத்தில் வெளிவந்த மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரோஜா தேவியின் திருமணம்
சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் சினிமாவில் பெரிதும் ஈடுபாடு இல்லாத காரணத்தினால், திருமணம் செய்துகொண்டால் சினிமாவிலிருந்து விலகிவிடலாம் என முடிவு செய்துள்ளார் சரோஜா தேவி.
மார்ச் 1, 1967 அன்று பொறியாளர் ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவரின் எதிர்ப்பார்ப்புக்கு எதிராக திருமணத்திற்கு பின்தான் சினிமாவில் கொடிகட்டி பறந்தார். சரோஜா தேவி - ஸ்ரீ ஹர்ஷா தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
வயது தொடர்பான நோய் அவரது மரணத்திற்குக் காரணம் என்று அறிவிக்கப்பட்டது, கோட்டா ஸ்ரீனிவாச ராவின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்குப் பிறகு, சரோஜா தேவியின் மறைவு சினிமா ஆர்வலர்கள் ஜீரணிக்க முடியாத ஒரு பாரிய இழப்பாகும்.
இந்நிலையில் தற்போது சரோஜா தேவி தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைராலாகி வருவதுடன் பலரும் இவரின் மரத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |