ரோகினியின் கொட்டத்தை அடக்கிய மீனா... கைது செய்து அழைத்துச் சென்ற போலிசார்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கைதாகியுள்ள நிலையில், மீனா மாஸாக குற்றவாளியை கண்டுபிடித்து ரோகினியை கைது செய்ய வைத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலை ரசிகர்கள் அதிகமாக பார்த்து வருகின்றனர்.
தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில், தற்போது முத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தீபன் குடும்பத்தினரை அடியாட்கள் வைத்து அடித்ததாக கூறி போலிசார் கைது செய்துள்ள நிலையில், தீபன் தங்களை அடித்தது சிட்டியின் ஆட்கள் என்று மீனாவிடம் கூறியுள்ளார்.
உடனே போலிசாரிடம் சென்று சிட்டியைக் குறித்து கூறியதால், தற்போது சிட்டியை கைது செய்த போலிசார் அவரை அடித்து விசாரித்துள்ளனர்.
அப்பொழுது ரோகினி குறித்த உண்மையை சிட்டி உளறிய நிலையில், அதிரடியாக போலிசார் வந்து ரோகினியை கைது செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |