Siragadikka Aasai: ஏமாந்து நிற்கும் மீனா... விஜயாவின் சூழ்ச்சியை அம்பலப்படுத்த போடும் திட்டம்
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வில்லி சிந்தாமணியுடன் சேர்ந்து மீனாவினை தோற்கடிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இதனை கண்டுிபடிக்க மீனா வேறொரு திட்டமிட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனா தனியாக தொழில் ஒன்றினை தொடங்கியுள்ள நிலையில், இவருக்கு தொழில் போட்டியாக சிந்தாமணி என்ற வில்லி களமிறங்கியுள்ளார்.
இவர் விஜயாவுடன் சேர்ந்து கொண்டு, மீனாவிற்கு எதிராக திட்டமிட்டு வரும் நிலையில், மீனாவும் பணத்தை ஏமாந்துள்ளார்.
மேலும் விஜயாவை கையும் களவுமாக பிடிப்பதற்கும் மீனா திட்டமிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |