Siragadikka Aasai: ரோகினியால் மனோஜிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை! தலைகீழாய் கிடக்கும் அவலம்
சிறகடிக்க ஆசை சீரியலில் காதல் பிரச்சனை ஏற்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று மனோஜ் கொடுத்த ஐடியாவால் உறவினர்கள் தர்மஅடி கொடுத்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை திட்டித்தீர்த்து வருகின்றார்.

தற்போது க்ரிஷும் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், ரோகினியின் உண்மை எதுவும் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விஜயா வைத்துள்ள நடனபள்ளியில் பிரச்சனை ஒன்று எழுந்த நிலையில், விஜயாவை விட்டுக்கொடுக்காமல் அவருக்கு ஆதரவாக மீனா முத்து இருந்துள்ளனர்.
இதனால் ரோகினி தானும் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்று நினைத்து மனோஜை சிக்கலில் மாட்டி விட்டுள்ளார்.
மனோஜை அறை ஒன்றில் கட்டிப்போட்டு வைத்துள்ளனர். ரோகினி அவர்களிடம் கெஞ்சியும் எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        