Siragadikka Aasai: ஜெயிலுக்கு போனவன் தானே நீ? முத்துவிடம் எகிறிய மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் நண்பரை மனோஜ் அசிங்கப்படுத்தியதுடன், ஜெயிலுக்கு போனதையும் அனைவரது முன்பு கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து வாழ்க்கையை கொண்டு செல்லும் மீனாவை மாமியார் கொடுமை செய்கின்றார். ஆனால் கணவர் முத்து மீனாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார்.
மீனாவை தொழிலில் இருந்து விரட்டுவதற்கு சதி செய்த சிந்தமணி கடைசியில் தோற்றுப் போயுள்ளார்.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முத்துவின் நண்பர் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து சாப்பிடுகின்றார்.
அவர்களை அசிங்கப்படுத்தும் விதமாக மனோஜ் பேசியுள்ளார். பின்பு முத்து கோபத்தில் மனோஜை சாப்பாட்டை வாயில் திணித்து வெளிப்படுத்தியுள்ளார்.
இதில் மனோஜ் நீ ஜெயிலுக்கு போனவன் தானே நீ? என்று கூறியுள்ளார். இதுகுறித்து மீனா முத்துவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
