Siragadikka Aasai: போன் பேசி மாட்டிக் கொண்ட மலேசியா மாமா... சந்தேகத்தில் முத்து
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் விபத்தில் சிக்கியுள்ள நிலையில், முத்துவிற்கு மலேசியா மாமாவின் குரல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
இருவரும் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் கதைகளமாகவும், கொடுமைக்கு மத்தியில் மாமியாருக்கு சிறந்த மருமகளாகவும் கதை செல்கின்றது.
முத்து மீனாவின் வளர்ச்சி பிடிக்காமல் மாமியார், மனோஜ், ரோகினி பல சதிவேலைகளை செய்துவந்தும், மீனா முத்து இருவரும் உதவியே செய்து வருகின்றார்.
ஆம் மனோஜின் மருத்துவ செலவிற்கு முத்துவே பணம் கட்டியுள்ளார். இந்நிலையில் அண்ணாலை நண்பர் மகள் திருமணத்திற்கு சீர் செய்வதற்கு மலேசியா மாமா போன் செய்துள்ளார்.
அத்தருணத்தில் முத்து மீனா இருவருக்கும் அந்த குரலில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ரோகினி விரைவில் சிக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
