சிங்கிள் பசங்க: அம்மியில் சட்னி அரைக்கவிட்ட மாமியார்... ராவணனுக்காக போட்டியை பாருங்க
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் போட்டியாரளாக பங்கேற்றுள்ள இன்டாகிராம் பிரபலம் ராவணனின் அம்மா நிகழ்சியை நேரில் பார்வையிட வந்தபோது, பெண் போட்டியாளர்களுக்கு அம்மியில் சட்னி அரைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'.
இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இதில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்துவரும் ஜோடி என்றால், அது ராவணன் - ஆஷா ஜோடி தான்.இவர்களுக்கென தற்போது ஒரு ஆர்மியே உருவாகிவிட்டது.
ராவணன் கிராமத்தில் வளர்ந்தவர் என்பதால், அவருக்கு மனைவியாக வருபவர் அம்மியில் அரைத்து கிராமத்து பாணியில் சமைக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் என ராவணனின் அம்மா கூறியதையடுத்து, நிகழ்சியில் அம்மியில் அரைக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த நகைச்சுவை காட்சிகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |