ட்ரெண்டிங் சேலையில் அசத்தும் தொகுப்பாளி டிடி! வைரலாகும் காணொளி
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி செம ட்ரெண்டிங்கான ஸ்கின் கலர் சேலையில், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அழகிய போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

இவரின் பெயரை விட டிடி என்று அறிந்தவர்கள் தான் ஏராளம். காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார்.
அந்த நிகழ்ச்சி டிடியின் அடையாளமாகவே மாறிவிட்டது. சின்னத்திரையில் உச்சத்துக்கே சென்ற இவர், விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

இவரின் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், சிங்கிளாகவே வாழ்வில் பல விடயங்களை சாதித்து வருவதுடன், தனிமையிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை நிரூபித்து வருகின்றார்.
தற்போது 40 வயதை கடந்த நிலையிலும், இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், குறையாத அழகுடன் ஜொலித்து வரும் டிடி சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில், அசத்தலான ட்ரெண்டிங் சேலையில், உன்னோடு சரணாகிறேன் என பதிவிட்டு டிடி வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |