சமூக வலைத்தளங்களில் சிக்காத ஆசை பட நாயகி! சுவலட்சுமியின் கணவரை பார்த்துருக்கிங்களா?
நடிகை சுவலட்சுமி தற்போது என்ன செய்கின்றார் என்று இணையதளவாசிகள் நீண்ட காலமாக தேடிவருகின்றனர். ஆனால் அவர் எந்த சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இல்லை.
நடிகை சுவலட்சுமி
தமிழ் சினிமாவில் 90களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் சுவலட்சுமி. சுவலட்சுமி இவர் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆசை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், லவ் டுடே என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் இந்த படத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த சுவலட்சுமி தமிழில் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தள்ளினார். இவருக்கு இன்றும் தமிழ் சினிமாவை பொருத்த வரையில் மிகுந்த மதிப்பு காணப்படுகின்றது.
நடிகை சுவலட்சுமி கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட வங்காளத்தை சேர்ந்த சுவாகதோ பானர்ஜி என்பவரை 2002- இல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லை.
தற்போது சுவலட்சுமி தொழிலதிபரான தனது கணவருக்கு உதவியாக சொந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார் என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதோ அவரின் கணவர் புகைப்படம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |