பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி- மருத்துவர் விளக்கம்
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கே.ஜே. யேசுதாஸ்
சுமாராக 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை பாடி சாதனை படைத்தவர் தான் கே.ஜே. யேசுதாஸ்.
இவர், மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்களா மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
இதன்படி, தமிழில் “பொம்மை” என்னும் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினாலும், “கொஞ்சும் குமரி” திரைப்படத்தில் உள்ள பாடல்களே முதலில் வெளியாகின. 80 மற்றும் 90கள் காலப்பகுதியில் இவர் குரலில் வெளியான பாடல்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தன.
அந்த காலப்பகுதியில் பிரபலமாக இருந்த கே.ஜே. யேசுதாஸ் “தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு”, “வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்” உள்ளிட்ட பாடல்கள் இன்றும் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது யேசுதாஸ் நலமோடு இருப்பதாகவும், பரிசோதனைக்குப் பின் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த செய்தி அறிந்த யேசுதாஸின் ரசிகர்கள் நலம் விசாரிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |