பிரபுதேவாவை உரித்து வைத்திருக்கும் மகன் - அவரே வெளியிட்ட ஒற்றை புகைப்படம்
பிரவுதேவா அவருடைய மகனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
நடிகர் பிரபு தேவா
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், டான்ஸர் என பல திறமைக் கொண்டவர் தான் நடிகர் பிரபு தேவா.
இவரின் நடிப்பிற்கும் நடனத்திற்கும் இன்றும் தமிழகத்தில் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இயக்கிய படங்கள் நினைத்து பார்க்காத பல வெற்றிகளை கொடுத்துள்ளது.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் சில வீடியோக்கள் வைரலாக்கப்படும்.
இதற்கிடையில் பிரபு தேவா, ரம்லத் என்பவரை கடந்த 1991ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் உடல்நல குறைவால் சில வருடங்களுக்கு முன் உயிரிழந்து விட்டார்.
தற்போது பிரபுதேவா முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
அச்சு அசல் அப்பாவை போல் இருக்கும் மகன்
இந்த நிலையில், பிரபு தேவா சினிமாவை போல் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், மகனுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி காணொளி மற்றும் மகனுடன் எடுத்து புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்த ரசிகர்கள், “அடுத்த பிரபு தேவாவா இவர்? அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
