போர்வையை விலக்கி புகைப்படம் எடுத்த நபர்- கொதிப்பில் பேசிய பாடகி கல்பானா
பிரபல பின்னணி பாடகி கல்பனா அவரது வீட்டில் மயக்கமாக இருக்கும் பொழுது போர்வையை விலக்கி புகைப்படம் எடுத்த நபர் பற்றி பேட்டியில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாடகி கல்பனா
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் உட்பட பல்வேறு மொழியில் பாடல்கள் பாடி பிரபலமானவர் தான் கல்பனா.
இவர், குடும்பத்தினருடன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்- நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.
இப்படியொரு சமயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்த காரணத்தினால் சந்தேகமடைந்த குடியிருப்பு வாசிகள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர்.
யாரும் கதவை திறக்காமல் இருந்த காரணத்தினால் பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினர் அளித்த தகவலின்படி, கதவை உடைத்து வீட்டிற்குள் பொலிஸார் சென்று பார்த்த போது கல்பனா சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட பொலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்கக் கொண்டு செல்லும் பொழுது கல்பனா போற்றியிருந்த போர்வையை விலக்கி ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
தரமான பதிலடிக் கொடுத்த கல்பனா
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வந்த கல்பனா ஊடகவியலாளர் சந்திப்பொன்றை தயார் செய்து, அவர் சுயநினைவு இல்லாத போது அவரை மோசமாக பேசிய ஊடகங்களுக்கு தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
அதில், “நான் சுய நினைவு இல்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, ஊடகவியலாளர் ஒருவர் என்னுடைய போர்வையை விலக்கி, புகைப்படம் எடுத்துள்ளார். இது ஒரு தவறான செயல். மீடியா தான் எங்களை பிரபலமடையச் செய்தது. ஆனால் அவர்களே எங்களுக்கு எதிராக இருந்தால் என்ன செய்வது?..” என பேசியுள்ளார்.
"அவர் ஒரு பாடகியாக இருந்தாலும் பெண் என்பதால் அவருடைய அனுமதி இல்லாமல் இவ்வாறு நடந்து கொண்டது தவறு.." என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை முன் வைத்தும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
