மருத்துவமனையில் பாடகி கல்பனா- அம்மா குறித்து உண்மையை உடைத்த மகள்
பிரபல பாடகி கல்பனா வீட்டில் மயங்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை அவரது மகள் பேசியிருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
பாடகி கல்பனா
பிரபல பாடகி கல்பனா நேற்றைய தினம் வீட்டில் மயங்கிய நிலையில் மீட்டெடுக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் போலீசாரால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதை தொடாந்து போலீசார் இவர் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரியப்படுத்தினார்கள். இந்த விசாரணையில் சென்னையில் இருந்த அவரது கணவர் பிரசாத்தையும் வரவைத்து போலீசார் விசாரித்தனர்.
பின்னர் இவரது மகள் தயா பிரசாத்தையும் விசாரித்தனர். இதன்போது அவரது மகள் தயா பிரசாத் கூறியது “கல்பனா தற்கொலை செய்து கொள்ளவில்லை, அதிகப்படியான மாத்திரைகளே அவர் மயங்கியதற்கு காரணம் என அவர் கூறி இருந்தார்.
பின் தங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அம்மா உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மகள் கூறினார்.
விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கல்பனா மகள் தயா பிரசாத் தற்போது தெரிவிததுள்ளார். அவர் மருத்துவமனையில் தனது தாயை அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார்.
எனவும் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் தெரியவந்திருப்பது பாடகி கல்பனா தற்கொலை செய்யவில்லை அவர் அதிக மாத்திரைகள் உண்டதால் மட்டுமே 2 நாட்களாக மயங்கிய நிலையில் காணப்பட்டிருக்கிறார் என்பது தான்.
இது தவிர அவர் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில மாத்திரைகளை எடுத்துக்கொண்ட போது அவற்றின் அதிகரித்தமையாகும்.
கல்பனாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்த போது கல்பனாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், மயக்க நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தோம் என்றும் தெரிவித்தனர்.
இப்போது கல்பனா சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறினர். இன்னும் ஓரிரு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |