துணை மீது நம்பிக்கை இல்லாத ராசியினர்- இவர்களை திருமணம் செய்தால் நரகமாம்.. நீங்க என்ன ராசி?
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணமும் அந்த ராசியை ஆளும் அதிபதிகளை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் மாத்திரம் தன்னுடைய துணை மீது நம்பிக்கை இல்லாமல் நடந்து கொள்வார்களாம்.
அதே சமயம் அவர்களின் துணை என்ன செய்தாலும் அதனை சந்தேக பார்வையுடன் தான் பார்ப்பார்களாம். இது போன்று குணம் கொண்டவர்களை திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை நரகத்தில் இருப்பது போன்று இருக்கும். இப்படிப்பட்ட குணம் ஒரு ஆசீர்வாதமாகவும், சாபமாகவும் இருக்கலாம்.
இப்படியான குணம் வருவதற்கு அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஏமாற்றங்களும் காரணமாக இருக்கலாம்.
அந்த வகையில் தன்னுடைய துணையை நம்பாதவர்கள் என்னென்ன ராசியில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நம்பிக்கையில்லாத ராசியினர்
1. மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் புதனால் ஆளப்படுவார்கள். இவர்களிடம் இரட்டை இயல்பு மற்றும் பல்வேறு காதல் வலைகள் இருக்கும். இதனால் நம்பிக்கையின்மையால் அவஸ்தைப்படுவார்கள். புதிய அனுபவங்களை அதிகமான தேடுவார்கள். அவர்களின் என்ன நடந்தாலும் அதனை ஒரு அனுபவமாக நினைத்து கடந்து விடுவார்கள். சில சமயங்களின் அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் துரோகம் நடந்து விட்டால் அதனை நினைத்து கொண்டு தற்போது இருக்கும் வாழ்க்கையை சரியாக வாழ மாட்டார்கள்.
2. தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழனால் ஆளப்படுவார்கள். இவர்கள் அதிகமான சுதந்திரமாக வாழ்வார்கள். மற்றவர்களிடம் புதிய அனுபவத்தை பெற்றுக் கொண்டு தனி நபராக வாழ ஆசைப்படும் நபராக இருப்பார்கள். இவர்கள் தங்களின் துணை மீது வைக்கும் நம்பிக்கையை விட உற்சாகமான உறவுகள் மீது அதிகமாக நம்பிக்கை வைப்பார்கள். சில நேரங்களில் நேர்மை, உண்மை தவறி விட்டால் அதனை நினைத்து கவலைப்படும் இயல்பு கொண்டவர்கள். யாராவது துரோகம் செய்து விட்டால் அவர்களை தங்களின் வாழ்க்கையில் இருந்து விலக்கி விடுவார்கள்.
3. கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் யுரேனஸ் கிரகத்தினால் ஆளப்படுவார்கள். வழக்கத்திற்கு மாறாக சுதந்திரமான திரியும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களை சார்ந்தவர்களை இவர்களின் கட்டுபாட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்பதில் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். புதிய வாழ்க்கையை நினைத்து நிறைய எதிர்பார்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. துரோகத்தை விட இவர்களிடம் விசுவாசம் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு யாராவது துரோகம் செய்தால் அவர்களை மன்னிக்கமாட்டார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).