பிரபல பின்னணி பாடகி கல்பனா தவறான முடிவு- ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
பாடகி கல்பனா அவரது வீட்டில் மயக்கமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பாடகி கல்பனா
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகள் உட்பட பல்வேறு மொழியில் பாடல்கள் பாடி பிரபலமானவர் தான் கல்பனா.
பிரபல பாடகியான கல்பனா ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். அவரது வீட்டு கதவு கடந்த இரண்டு, மூன்று தினங்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமுற்ற அக்கம்பக்கத்தினர் கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர்.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றாக் சேர்ந்து அவரை அழைக்க முயற்பட்டுள்ளனர். ஆனால் உள்ளிருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை.
மருத்துவமனையில் அனுமதி
இதனை தொடர்ந்து அவர்களுடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். அதிலும் கல்பனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இது சம்பந்தமாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக கல்பனா வீட்டிற்கு வந்த பொலிஸார், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பார்த்த போது, அவர் வீட்டிலுள்ள கட்டிலில் மயங்கியப்படி சரிந்து கிடந்துள்ளார்.
கல்பனாவை மீட்ட பொலிஸார், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
கல்பனாவின் கணவர் சென்னையில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில், அவரை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகளை உறவினர்கள் மேற்க் கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

