அப்படிதான் குழந்தை பெற்றீர்களா? விமர்சனத்திற்கு மனம் உருகி சின்மயி கொடுத்த பதில்!
தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகி சின்மயி சமீபத்தில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தார்.
அதே சமயத்தில் சின்மயி Surrogacy மூலம் குழந்தை பெற்று இருப்பதாக விமர்சித்து வந்ததை அடுத்து தற்போது அதற்கு விளக்கத்தை கொடுத்துள்ளார்.
திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் குழந்தை இல்லாமல் தான் இருந்து வந்தது. பாடகி சின்மயிக்கும் வயதாகி கொண்டே போனதால் இவருக்கு குழந்தை இல்லாததை வைத்து பல கேளிகள் எழுந்து வந்தன.

தற்போது அதற்கு, ட்விட்டரில் பதில்கொடுத்ததில், “ட்ரிப்தா மற்றும் ஷ்ரவாஸ், எங்களது புதிய மற்றும் என்றைக்குமான பிரபஞ்சத்தின் மையம் இனி இவர்கள் தான். எனது கர்ப்ப காலம் முழுவதும் நிறைய பேர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், முழுவதும் எனக்கு குழந்தை இல்லாதது குறித்தும், நான் பெண்ணாக முழுமையடையவில்லை என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.
பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்னைகளை நேரடியாக புரிந்து கொண்டு அமைதி காத்தேன். இதை எல்லாம் தாண்டி நான் மக்களை பற்றி புரிந்துகொண்டேன் என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து, 37 வயதாகும் சின்மயியை Surrogacy மூலம் அதாவது வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருப்பார் என்று விமர்சனங்களுக்கு பதிலத்து இருக்கிறார்.