இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான சின்மயி! வாடகைத்தாய் மூலமாகவா?
நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாடகி சின்மயி சுமார் 8 ஆண்டுகள் கழித்து இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
பல ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்த நிலையில், தற்போது தான் தாயாகி விட்டேன் என்கிற சந்தோஷ செய்தியை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் பெண் குழந்தைக்கு த்ரிப்த்தா என்றும் ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தைகளின் பிஞ்சு விரல்களை ஷேர் செய்து எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும் தான் உலகமே என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.
Driptah and Sharvas
— Chinmayi Sripaada (@Chinmayi) June 21, 2022
The new and forever center of our Universe. ❤️
@rahulr_23 pic.twitter.com/XIJIAiAdqx
சின்மயிக்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில் சிலர் இது வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைகள் தானே என கேட்டிருந்தார்கள்..
அதற்கு சின்மயில “ எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் கர்ப்பமாக இருந்த விஷயம். முன்னரே சொல்லி இருந்தால், அதற்கு ஏகப்பட்ட கதைகளை கட்டி மனசுக்கு கஷ்டத்தை கொடுத்திருப்பார்கள். அதனால் தான் வெளியே சொல்லவில்லை” என விளக்கம் கொடுத்திருக்கிறார்.