பாடகி பவதாரணி அதிக மன உளைச்சலுக்கு உள்ளான விஷயம் இதுவா?
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
"காதல் வானிலே" என்ற பாடல் மூடம் இசையுலகிற்கு அறிமுகமானவர் இளையராஜாவின் மகள் பவதாரணி.
இவர் 1976ம் ஆண்டு பிறந்தார். இந்த பாடலுக்கு மேஸ்ட்ரோ இசையமைத்து கொண்டிருக்கும் போது இளையராஜா தனது மகளை ஒரு பாடல் பாட வைக்க வேண்டும் என்று இசையுலகிற்கு அவரை கொண்டு வந்த பாடல் இது தான்.
சிறு வயதிலேயே மைடியர் குட்டிச்சாத்தான் எனும் மலையாளப் படத்தில் அவர் பாடிய பாடல் வெளியாகி இருந்தது.
இவர் பாடிய பாடல்களில் "ஒளியிலே தெரிவது தேவதையா", "காற்றில் வரும் கீதமே", "குயில் போல பொண்ணு ஒண்ணு" போன்ற பாடல்கள் எல்லாம் ஹிட்டான பாடல்களாகும்.
சிறுவயதில் இருந்தே தனது அப்பாவும் அவரின் ககோதரர்களும் பண்ணும் இசைக்கச்சேரிகளைப் பார்த்து பவதாரணி வளர்ந்ததால் அவருக்கு இசையில் ஆர்வம் என கூறியுள்ளார்.
இவர் திரையுரகில் பல பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
அந்த வகையில் அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கம், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பா, கோவா, மங்காத்தா, அனேகன் மற்றும் கடைசியாக மாநாடு உள்ளிட்ட படங்களில் இவர் பாடல் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அவர் கிட்டதட்ட 10 படங்களுக்கு பல மொழிகளில் இசையமைத்து கொடுத்துள்ளார். இவர் சமீபத்தில் சில போட்டிகளில் பேசும் போது அவர் எதற்காக மன உளைச்சல் அடைந்திருக்கிறார் என கூறியிருந்தார் .
“மூத்த அண்ணடன் அதிக நேரம் இசை பற்றி பேசுவார். என்னுடனும் யுவனுடனும் அவ்வளவாக இசைபற்றி பேசியது இல்லை, எப்போதும் சாப்பிடும் நேரத்தில் அண்ணன் கார்த்தி மற்றும் தம்பி யுவன் தங்களின் இசை கம்போஸிங் பற்றி அப்பாவிடம் பேசுவார்கள்.
அப்பா என் சகோதரர்களின் இசையில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக கூறும் போது, அந்த இடம் போர்களமாக மாறிவிடும், அப்போது எனக்கு ஒரே மனவுளைச்சலாக இருக்கும்.
ரெக்கார்டிங் தியேட்டரில் எந்தளவுக்கு கண்டிப்புடன் இருப்பாரோ அதே அளவுக்கு கண்டிப்பு எங்கள் வீட்டிலேயும் இருக்கும்' என பவதாரணி கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் மறைவதற்கு முன்னர் பேசிய வீடியோக்கள் எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.