மகளை பறி கொடுத்து தவிக்கும் ஈஸ்வரி.. மனமாறிய கதிர்- தவிப்பில் குடும்பத்தினர்
எதிர்நீச்சல் சீரியலில் மகளை பறி கொடுத்த ஈஸ்வரி கோயிலில் கத்தி அழுதுகொண்டிருக்கிறார்.
எதிர்நீச்சல்
விறுவிறுப்பிற்கு பஞ்சமே இல்லாமல் சென்றுக் கொண்டிருக்கும் தொடர் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் தமிழ் சினிமாவிலுள்ள பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில், கரிகாலனை எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் குணசேகரன் இறங்கிய போது தர்ஷினி யாரும் எதிர்பாராத வகையில் கடத்தப்பட்டுள்ளார்.
குணசேகரன் இப்படி நடந்து கொள்வது வீட்டிலுள்ள யாருக்கும் பிடிக்கவில்லை. மாறாக குணசேகரனை நம்பி இனிமேலும் பயனில்லை எனக் கூறி விட்டு ஈஸ்வரியும் மற்ற மருமகள்களும் தர்ஷினியை தேடி சென்றுள்ளனர்.
ஆனால், ஈஸ்வரி தான் தன் மகளை கடத்தி வைத்து விட்டு நாடகம் போடுகிறார் என விசாலாட்சியும் குணசேகரனும் நினைத்து கொண்டு அமைதியாக வீட்டில் இருக்கிறார்கள்.
மனமாறிய கதிர்
இந்த நிலையில் குணசேகரன் செய்வதை புரிந்து கொண்ட கதிர், மனமாறி தர்ஷினிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அத்தோடு தன் அப்பா மனமாறிய போது யாரும் பக்கத்தில் இல்லை.7 வயது மதிக்கத்தக்க தாரா தான் கதிருக்கான அனைத்து வேலைகளையும் செய்து பார்த்து கொள்கிறார்.
அப்போது நந்தினிக்கு கோல் செய்த கதிர், “எப்படியாவது தர்ஷினியை கண்டுபிடித்து அழைத்து வா.. நம்ம பொண்ணு தாரா தான் என்னை பார்த்து கொள்கிறார்...” என அழுதுக் கொண்டே கூறுகிறார்.
கதிரின் இந்த மாற்றத்தை சந்தோசப்பட முடியாத நிலையில் குடும்பத்திலுள்ள மற்றவர்கள் இருக்கிறார்கள். மகளை தொலைத்து விட்டு கோயிலில் கத்தி அழுதப்படி ஈஸ்வரி தரையில் படுத்திருக்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |