இளையராஜா மகளின் மரணம்- பேரதிர்ச்சியில் திரையுலகம்! முழு விபரங்கள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த இளையராஜாவின் மகள் பவதாரணி நேற்று காலமானார்.
இளையராஜா மகளின் பூத உடல் கொழும்பு வைத்தியசாலையில் இருந்து எடுத்து செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுவயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட பவதாரணி ராசய்யா படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
தனித்துவமான குரல் வளம் கொண்ட பவதாரணி, தனது தந்தை மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக தேசிய விருதையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றார்.
அங்கு சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார், இச்செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவரின் உடல் தற்போது கொழும்பு வைத்தியசாலையிலிருந்து ஜெயரட்ண மலர்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து யுவன் மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் இன்று காலை கொழும்பு வந்தாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றன.
இப்படியாக பவதாரணி தொடர்பான பூரண தகவல்களை லங்கா சிறி யூடியூப் சேனல் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |