இவ்வளவு எளிமையா? சத்தமே இல்லாமல் காதலரை கரம்பிடித்த பாடகி
மலையாள நட்சத்திர பாடகி ஆர்யா தயாள் மிக எளிமையாக காதலரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவை போன்று மலையாள சினிமாவில் நட்சத்திர பாடகியாக இருப்பவர் தான் ஆர்யா தயாள்.
இவர், இசை ஆர்வலர்களுக்கு மத்தியில் மிக பிரபலமானவர்.
மலையாளத்தில் தனது மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக்குழு மூலம் மிகவும் பிரபலமான ஆர்யா தயாளுக்கு கேரளாவில் பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
திருமணம்
இவ்வளவு பிரபலமாக இருக்கும் ஆர்யா தயாள் யாரும் எதிர்பார்க்காத வகையில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அபிஷேக்- ஆர்யா தயாள் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இவர்களின் புதிய பயணத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |