பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் - யாரை அதிகமாக பாதிக்கும்?
தற்போது புதிய கொரோனா வைரல் ஒன்று அமெரிக்காவில் உருமாறிய வடிவமான ஸ்ட்ரேடஸ் எனும் பெயரில் பரவி வருவதாகவும் அதிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஹாங்கொங், ஜப்பான், தாயலாந்து, தென் கொரியா, நேபாளம்,தைவான், கனடா, ஜெர்மனி மற்றும் வியட்நாம் உட்பட சுமார் 18 நாடுகளில் இந்த வைரஷின் தாக்கம் இருக்குமாம்.
மக்கள் ஓரளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி கொண்டால் இந்த வைரஸின் தாக்கமும் குறையும். இந்த பதிவில் இந்த புதிய கொரோனா வைரஸில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை பார்க்கலாம்.
புதிய வைரஸ்
ஸ்ட்ரேடஸ் என்பது கொரோனா வைரசின் புது வடிவமாகும். இந்த வைரஸ் தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி., என கொடுக்கப்பட்டுள்ளது.இது, ஒரு கலப்பின வைரஸ் ஆகும்.
இது, நடப்பாண்டு ஜனவரியில் தென்கிழக்கு ஆசியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உலக சுகாதார நிறுவனம் இதை, ' கண்காணிக்கப்பட வேண்டிய உருமாறிய வைரஸ்' என வகைப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் சுகாதார ஆபத்து என்பது குறைவாகவே இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஏற்கனவே உடல்நல குறைபாடு உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு சற்று கடுமையான நோய் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |