சாப்பிட்டவுடன் செய்யவே கூடாத 5 செயல்கள்! என்னென்ன தெரியுமா?
பொதுவாகவே நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சரியாக உணவு முறையை பின்பற்றுவது இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அதை விட முக்கியம் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது நாம் உண்ணும் உணவு சீராக செரிமானம் ஆகும் போது தான் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக அகத்துறிஞ்சப்படும்.
அதனால் சாப்பிட்ட பின்னர் சரியாக பழக்கங்களை பின்பற்ற வேண்டியதும் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அந்தவகையில் செரிமான அமைப்பு சீராக செயல்படவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சாப்பிட்ட உடனே செய்யவே கூடாத விடயங்கள் என்னென்ன என்பது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.தண்ணீர்
சாப்பிட்ட உடன் அல்லது சாப்பிட்டுக்கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவகள் மத்தியில் பரவலாக இருக்கின்றது. இவ்வாறு செய்தால் வயிற்று அமிலங்கள் மற்றும் நொதிகளின் சமநிலை பாதிக்கப்பட்டு செரிமானத்தில் தாமதம் அல்லது செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.
அதனால் உணவு சரியாக ஜீரணமாகாது, மேலும் வாயுத்தொல்லை, அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.
மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி உணவு சாப்பிட்டன் பின்னர் குறைந்தது 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிப்பது தான் சரியாக முறையாகும்.
2.தூங்குதல் அல்லது படுத்து ஓய்வெடுத்தல்
சிலருக்கு சாப்பிட்ட உடனே படுத்துக்கொளும் அல்லது குட்டி தூக்கம் போடும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. மேலும் அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படலாம். இது தவிர, உடல் பருமன் அதிகரிக்கும் அபாயதும் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சாப்பிட்டதன் பின்னர் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்துவிட்டு பின்னர் படுக்கைக்கு செல்வதே சிறந்தது. குறிப்பாக இரவு சாப்பாட்டுக்கு பின்னர் நடைபயிற்சி செய்வது அவசியம்.
3. புகைபிடித்தல்
சிலருக்கு சாப்பிட்ட உடனேயே புகைபிடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். சாப்பிட்ட பிறகு சிகரெட் புகைப்பது மற்ற நேரங்களை விட பல மடங்கு தீங்கு விளைவிக்கும் என ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. இது புற்றுநோய், நுரையீரல் நோய் மற்றும் செரிமான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கின்றது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
4. தேநீர் அல்லது காபி குடித்தல்
சாப்பிட்ட உடனே தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்கள் மத்தியில் இருக்கின்றது. இது ஒரு அலாதி இன்பம் என்றாலும் உடலில் இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக பெண்களில், இது இரத்த சோகை பிரச்சனையை அதிகரிக்கும் காரணங்களில் முன்னிலை வகிக்கின்றது. தேநீர் அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், சாப்பிட்ட பின்னர் குறைந்தது 1 மணி நேரம் கழித்து குடிப்பது நல்லது.
5. உடற்பயிற்சி செய்தல்
முக்கியமாக சாப்பிட்ட உடனேயே அதிக உடற்பயிற்சி செய்வதும் உடல் ஆரோக்கியத்தில் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக, தசைகளை நோக்கி இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, செரிமான அமைப்புக்கு சரியான அளவு இரத்தம் கிடைக்காமல் போவதால், வயிற்று வலி, வாந்தி, வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. சாப்பிட்டதன் பின்னர் குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் கழித்து உடற்பயிற்சியில் ஈடுப்படுவதே சிறந்த முறையாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |