திடீரென நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்... என்ன காரணம்?
பிரபல நடிகை த்ரிஷாவின் சென்னை வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் நடத்தியுள்ளனர். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் இளவரசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் திரிஷா. 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகி,தொடர்ந்து இன்று வரையில் கதாநாயகியாகவே தன்னை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டாலும், இன்றளவும் அதே இளமையுடன் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
அஜித், திரிஷா நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆனால் அதனை தொடர்ந்து த்ரிஷா மற்றும் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது.
இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெடிகுண்டு மிரட்டலா?
இந்நிலையில், தற்போது தேனாம் பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அவரது வீட்டை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு, பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் வீடு மற்றும் கவர்னர் மாளிகைக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து அனைவரது வீட்டிலும் மோப்பநாய் உதவியுடன் நடந்த சோதனையில் வெடி குண்டு மிரட்டல் போலி என தெரிய வந்துள்ளது குறித்த விடயம் த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |