Singappenne: உண்மை அறியும் அன்பு அம்மா.. வசமாக சிக்கிய வார்டன்- ஆனந்தி கொடுக்கப்போகும் பதில் என்ன?
அன்பு அம்மாவை மருத்துவமனையில் இருந்து பார்த்து கொண்டது ஆனந்தி தான் என்பதனை அன்பு அம்மா தெரிந்து கொள்கிறார்.
சிங்க பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கதாநாயகிக்காக உண்மையான காதலூடன் காத்திருக்கும் இரண்டு நாயகர்களை கொண்டு நகர்த்தப்படுகின்றது.
ஆனந்தியை பணக்காரரான மகேஷும், ஏழை வீட்டு பையனான அன்புவும் காதலிக்கிறார்கள். எதுவும் அறியாத பாவப்பட்ட பெண்ணாக இருக்கும் ஆனந்தி இதனை எப்படி சமாளிக்கிறார் என்பதனையே கருவாக வைத்து இந்த கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஆனந்தியை கடத்துவதற்காக இரண்டு பேர் பாதையில் காத்திருக்கிறார்கள். அப்போது அந்த வழியில் வரும் அன்புவின் அம்மாவை கண்டதும் என்ன ஆனாலும் அவரிடம் சென்று பேசுவோம் என்ற தைரியத்துடன் அவர் நேரில் செல்கிறார்.
உண்மையறியும் அன்பு அம்மா
இந்த நிலையில், ஆனந்தி தான் தன்னை மருத்துவமனையில் கண்விழித்து பார்த்து கொண்டார் என்பதனை அன்பு அம்மா அறிந்து கொள்கிறார்.
“அவள் ஏன் என்னை பார்த்து கொள்ள வேண்டும்..” என்பதனை அவருடைய ஆஸ்டலுக்கு சென்று கேட்கிறார். ஆனந்தி என்ன பதில் கொடுக்கப்போகிறார் என்பதனை அங்கிருந்த அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்கையில், மகேஷின் காதலுக்கு வார்டன் தான் உதவிச் செய்கிறார் என்ற விடயம் ஆனந்திக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் அறையில் பேசியதை ஆனந்தி வெளியில் இருந்து கேட்டு விடுகிறார்.
மகேஷ் ஆனந்திக்கு என்ன பதில் கொடுப்பது என தெரியாமல் திகைத்து போய் நிற்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |