Ethirneechal: குணசேகரனை வெளியே கொண்டுவர சம்மதித்த பெண்கள்... எதிர்பாராத டுவிஸ்ட்
எதிர்நீச்சல் சீரியலில் சிறையிலிருக்கும் குணசேகரனை வெளியே கொண்டு வருவதற்கு பெண்களும் சம்மதித்துள்ள நிலையில், கதிர் பேரதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். இந்நிலையில் குணசேகரன் சொத்து கதிருக்கு கைமாறியுள்ளது. தர்ஷனுக்கு திடீர் திருமண ஏற்பாடுகளையும் குணசேகரன் செய்துள்ளார்.
தற்போது சிறையிலிருக்கும் குணசேகரனை வெளியே எடுத்தால் மட்டுமே, இந்த திருமணத்தினை நிறுத்த முடியும் என்ற முடிவிற்கு பெண்கள் வந்துள்ளனர்.
ஆனால் இதில் கதிருக்கு மட்டும் தான் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அண்ணனின் சொத்தை தன்னிடம் வைத்துக்கொள்வதற்கு சிக்கல் ஏற்படும் என்ற பயம் கதிருக்கு வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |