Singappenne: ரகுவின் கழுத்தை நெறித்த அன்பு... கொத்தாக மாட்டிய கருணாகரன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ரகு விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அன்பு ரகுவின் கழுத்தை நெறித்து கொலை செய்வது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகின்றது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியைக் காதலித்து வந்தனர்.
ஆனால் ஆனந்தி அன்புவை காதலித்து வந்த நிலையில், மகேஷ் ஒதுங்கி சென்றுள்ளார். தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் குடும்பத்தினர், ஹாஸ்டல் என அனைத்து இடத்தில் உள்ளவர்களுக்கு தெரிந்துள்ளது.
அன்பு ஆனந்திக்கு பக்கபலமாக நிற்கும் நிலையில், ஒருவழியாக ரகுவை கண்டுபிடித்து, கருணாகரன் தான் காரணம் என்பதை தெரிந்து கொண்டனர்.
ஆனால் ரகு எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்பு ஆனந்தியின் நிலையினை நினைத்து கோபத்தில் ரகுவை கொலை செய்ய கழுத்தை நெறிக்கின்றார்.
கருணாகரனுக்கு ஓரளவு உண்மை தெரிந்த நிலையில், அவரும் ஆடிப்போய் நிற்கின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
