Singappenne: ஏன் தம்பி உங்களுக்கு விஷயமே தெரியாதா? மகேஷிடம் வாயைத் திறந்த அன்பு அம்மா
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு அம்மாவை எதார்த்தமாக பார்த்து காரில் அழைத்துச் செல்லும் மகேஷிடம் அவர் ஆனந்தி பற்றிய உண்மையை கூறுவது போன்று ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியல் டிஆர்பி-யிலும் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. மக்கள் விரும்பி பார்க்கும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
அதாவது ஆனந்தியின் கர்ப்பம் அனைவருக்கும் தெரிந்த நிலையில், மகேஷிற்கு மட்டும் தெரியாமல் இருக்கின்றது. ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் இதற்கு காரணம் யார் என்பதை தேடி வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் ரகுவை பிடித்து விசாரித்த போது அவன், கருணாகரனை கைகாட்டியுள்ளார். இதனால் கருணாகரன் வீட்டிற்கு நேரடியாக வந்த அன்பு ஆனந்தி அடித்து துவைத்துள்ளனர்.
பின்பு ரகுவைப் போன்று கருணாகரனும் மருத்துவமனைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக விட்டு வைத்துள்ளனர். தற்போது ரகுவிற்காக கடவுளிடம் ஆனந்தி பிரார்த்தனை செய்து வருகின்றார்.

Ethirneechal: புதிய அதிகாரியிடம் நேருக்கு நேர் கோபத்தை காட்டிய ஜனனி! வந்ததும் கைவரிசையைக் காட்டிய ஞானம்
மற்றொரு புறம் அன்புவின் அம்மாவை எதார்த்தமாக சந்தித்து காரில் அழைத்துவரும் மகேஷிடம் அவர் உண்மையை கூறுவது போன்றும் காணொளியில் காட்டப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |