Singappenne:சதியால் மாட்டிக்கொள்ளும் துளசி - ஆனந்தி திருமணம் செய்வாரா?
துளசியின் சதியை யாழினி கண்டுபிடித்து அதை துளசியிடம் சொல்லி ஆனந்தி தான் மருமகள் என சவால் விடுகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர்.இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலித்தனர். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கியுள்ளார்.
இருந்தாலும் ஆனந்தியும் அன்புவும் ஒன்று சேர வேண்டும் என்பதற்காக மகேஷ் உதவி செய்து வருகிறார். ஆனால் அன்புவை காதலித்த அத்தை மகள் துளசி ஆனந்தி அன்புவை பிரிக்க அன்புவின் அம்மாவை கைகுள் போட்டு வைத்துள்ளார்.
துளசியின் சதி
ஆனந்திக்காக அவர் அம்மா எடுத்து கொடுத்த தாலியை துளசி திருடி வைத்துக்கொண்டு தனக்கும் அன்புவிற்கும் திருமணத்தை நடக்க வைக்க சதிதிட்டம் தீட்டியுள்ளார்.
இந்த விடயம் எப்படியோ யாழினிக்கு தெரியவர அவர் துளசியிடம் ஆனந்தி தான் எங்கள் வீட்டு மருமகள் அதை யாராலும் தடுக்க முடியாது என கூறுகிறார்.
இன்னுமொரு பக்கம் மகேஷின் திட்டப்படி ஆனந்தியை திருமணப்பெண் போல அலங்கரித்து மேடைக்கு அழைத்து வருகின்றனர்.
ஒரு பக்கம் கருணாகரன் அன்புவை அழைத்துவர சென்றிருக்கிறார். இதில் அன்பு ஆனந்தி திருமணம் நடக்குமா இல்லையா என்பதை எபிசோட்டில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |