Singappenne:ஆனந்திக்காக உயிரை விட துணிந்த அன்பு - பிடிவாதம் விடும் ஆனந்தி
ஆனந்தி வந்து தன்னை பார்க்கும் வரைக்கும் அன்பு சாப்பிட மாட்டேன் என பிடிவாதமாக இருக்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், தற்போது ஆனந்திக்கு தெரியாமலே அவருக்கு அன்பு தாலி கட்டியுள்ளார்.
ஆனந்தி ஜெயந்தியின் திருமணத்தில் தோழியாக அமர்ந்திருந்த நிலையில், ஆனந்தியின் கழுத்தில் அன்பு ஆனந்திக்கு தாலி கட்டி விட்டார். ஆனால் அனந்தி இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத காரணத்தினால் அவர் அன்பை விட்டு பிரிந்து இருக்கிறார்.
இந்த நிலையில் அன்பு தன்னுடைய வீட்டை வீட்டை விட்டு வெளியே வந்து ஆனந்தியின் அக்காவின் கணவருடன் தங்கி இருக்கிறார். இதை அறிந்த ஆனந்தி எவ்வளவோ கூறியும் அன்பு தன் வீட்டிற்கு திரும்பவில்லை.
அன்பு தற்போது ஆனந்தி வந்து தனக்கு சாப்பாடு கொடுக்கும் வரைக்கும் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்து சாப்பிடாமல் படுத்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் ஆனந்தி எடுக்கப்போகும் முடிவு தான் தற்போது இன்றைய எபிசோட்டில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |