சரிகமப இறுதிச்சுற்றில் ஈழத்தமிழன்: அரங்கமே கண்ணீர்விட்ட தருணம்
சரிகமப வில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேசன் தெரிவாகி இருக்கும் நிலையில் அரங்கத்தில் இருந்த அனைவரும் அவருக்காக அழுதனர்.
சரிகமப
மக்கள் மனம் கவர்ந்த சரிகமப நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக வந்துள்ளது.
இதில் தற்போது வரை சுஷாந்திக்கா மற்றும் ஸ்ரீஹரி தெரிவாகி இருந்த நிலையில் தற்போது மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளர் இந்த வாரம் Folk சுற்றில் தெரிவு செய்யப்பட்டார்.

அந்த வகையில் இந்த வாரம் பத்து போட்டியாளர்கள் நன்றாக பாடி தங்களின் சிறப்பை காட்டி இருந்தனர். அதில் மிகச்சிறந்த போட்டியாளர்களாக பவித்ரா மற்றும் சபேஷன் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் இறுதிச்சுற்றுக்கு ஒருவர் தான் தெரிவு செய்யப்படுவார். அந்த வகையில் தற்போது இறுதிச்சுற்றுக்கு இலங்கையை சேர்ந்த சபேசன் தெரிவாகி இருக்கிறார்.

இவர் இறுதிச்சுற்றுக்கான தெரிவின் முதல் சுற்றில் இருந்தே ஒரு சுற்று விடாமல் அத்தனை சுற்றுக்களிலும் தன்னுடைய சிறப்பான திறமையை காட்டி கோல்டன் பெர்போமன்கள் வாங்கியுள்ளார்.

சபேசனுக்கு பொருத்தப்பட்டிருந்த நட்சத்திரங்கள் மொத்தமாக ஐந்து அதாவது அவர் இந்த டிக்கட் டு பினாலேவில் அனைத்து சுற்றிலும் கோல்டன் பெர்போமன்ஸ் வாங்கி உள்ளார்.
இதுவே ஒரு பெருமைகை்குரிய விடயமாகும். அவர் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியதும் தொகுப்பாளினி அர்ச்சனா அந்த இறுதிச்சுற்று chair உனக்கு எவ்வளவு முக்கியம் என கேட்ட போது சபேசன் அழுதுகொண்டே கிடைத்தால் நல்லம், இல்லை என்றால் திரும்பவும் முயற்ச்சி செய்யலாம் என கூறினார்.

இது அரங்கத்தில் இருந்த அனைவரையும் அழ செய்தது. போட்டியாளர்கள் நடுவர்கள் என எல்லோரும் சபேசன் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகியதில் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.
இதனை தொடர்ந்து சபேசன் வீட்டில் இருந்து யாரும் வருகை தராததால் போட்டியாளர் பவித்ரா சபேசனை அழைத்து கைகளை பிடித்துக்கொண்டு இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்களின் இருக்கையில் அமரச்செய்தார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |