இந்த டிப்ஸ் செய்து பாருங்க.. பரட்டையாக கட்டுக்கடங்காமல் இருக்கும் தலைமுடி இனி பளபளக்கும்
சிலரின் தலைமுடி பார்க்கும் பொழுது ஒரு செழிப்பு இல்லாமல் வறண்டு போய் பரட்டையாக காணப்படும்.
அத்துடன் அவர்களின் தலைமுடி வழக்கமாக இருக்கும் நிறத்தில் இருக்காமல் ஒருவகையான கபிலம் கலந்த நிறத்தில் இருக்கும். இப்படி தலைமுடி ஈரப்பத்தை இழந்து பரட்டை தலை போன்று தோற்றமளிக்கிறதா?
இந்த பிரச்சினையுள்ளவர்கள் தினமும் ஒரு சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். இதுவரையில் கவனிக்காமல் இருக்கும் உங்கள் தலைமுடியை பளபளப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டும்.
அந்த வகையில், கட்டுக்கடங்காத தலைமுடியை பட்டு மேனிபோல் பாதுகாப்பதற்கு உதவும் சில எளிய தந்திரங்கள் என்னென்ன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கட்டுக்கடங்காத தலைமுடியை பட்டு போன்று மாற்றும் டிப்ஸ்
1. எப்போதும் உங்களின் தலைமுடியை நீரேற்றமாக வைத்துக் கொள்வது அவசியம். அதே போன்று உடலையும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள நிறைய தண்ணீர் குடிக்கவும், ஈரப்பதமூட்டும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தினால் இயற்கையாகவே ஈரப்பதன் இருக்கும்.
2. சூடான நீரில் தலைமுடியை அலசுவதை தவிர்த்து தலைமுடி முடிந்தளவு குளிர்ந்த நீரில் அலச வேண்டும். ஏனெனின் அதிகமாக சூடு நீரில் குளிக்கும் பொழுது தலைமுடி வெடித்து போக வாய்ப்பு உள்ளது.
3. தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பளபளப்பாக வைத்து கொள்ளவும் தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டும். தேங்காய், ஆர்கன் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் அடிக்கடி பயன்படுத்தினால் தலைமுடி பட்டு போன்று இருக்கும்.
4. தேவையற்ற முடி உடைப்பு மற்றும் சுருட்டையைத் தவிர்க்க, பரந்த-பல் சீப்பு அல்லது பெரிய பற்கள் கொண்ட தூரிகைகளை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். முடியில் இருக்கும் சிக்கல்களை எடுக்க அகன்ற பற்கள் கொண்ட சீப்பு பயன்படுத்த வேண்டும்.
5. தலைமுடி அதிகமாக உலர்த்தப்படுவதைத் தடுக்க சல்பேட் இல்லாத ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். இது உங்களின் தலைமுடியை பரட்டையாக்க வாய்ப்பு உள்ளது.
6. ஒவ்வொரு நாளும் தலைக்கு குளிப்பதை தவிர்க்கவும். ஏனெனின் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகன்று விடும். வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடி அலசினால் போதுமானது.
7. தலைமுடி பராமரிப்பில் தலையணையும் ஒரு பங்கி வகிக்கிறது. பட்டு அல்லது சாடின் தலையணை உறைகளை பயன்படுத்த வேண்டும். இது தலைமுடியை மென்மையாக்கும். சிக்கலான தலைமுடி மற்றும் தலைமுடி உதிர்வை அதிகமாக ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
8. தயிர், தேன் மற்றும் கற்றாழை போன்ற பொருட்களுடன் கூடிய சில ஹேர் மாஸ்க்குகளை அடிக்கடி பயன்படுத்தலாம். இயற்கையாக செய்யக் கூடிய ஹேர் மாஸ்க்குகள் ஈரப்பதன் அளிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |