மழைக்கால தொற்றுக்களில் இருந்து நம் உடலை பாதுகாக்கும் சிறந்த பானங்கள்
பொதுவாக காலநிலை மாற்றம் ஏற்படும் உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரக்கூடும்.
உதாரணமாக, காலநிலை மாற்றத்தின் போது, காய்ச்சல், தலைவலி, முடி உதிர்வு, சரும பிரச்சினைகள், செரிமான கோளாறுகள், சளி பிரச்சனை, சுவாச பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம்.
அதில் ஒன்றாக மழைக்காலத்தில் செரிமான அமைப்பு மந்தம் ஏற்படும். இது காலநிலையில் ஈரப்பதம் ஏற்படும் போது இயற்கையாகவே பசியும் செரிமானமும் பாதிக்கப்படலாம்.
அதே சமயம், அசுத்தமான நீர் மற்றும் உணவை உட்கொள்வது அதனை தீவிரப்படுத்தும்.
மழைக்காலத்தில் பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் வைரசு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது வயிற்றுக்குள் சென்று அஜீரணம், வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பருவமழையின் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு வீட்டில் என்னென்ன வைத்தியமுறைகளை பின்பற்றலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மழைக்காலத்தில் செய்யக் கூடிய வீட்டு வைத்தியம்
1. இஞ்சி டீ
பல ஆண்டுகளாக, வயிற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்படும் போது இஞ்சி டீ எடுத்து கொள்ளும் பழக்கம் உள்ளது. நொறுக்கப்பட்ட இஞ்சியை தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அருந்தினால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. ஒரு கப் இஞ்சி டீயில் செரிமானத்தை சீர்ப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனை உணவிற்கு பின் எடுத்துக் கொள்ளலாம். மழைக்காலத்தில் வயிற்றிற்கு இதமாக இருக்கும்.
2. மஞ்சள் பால்
மழைக்காலத்தில் எதாவது அழற்சி பிரச்சினை வந்தால் மஞ்சள் பால் குடிக்கலாம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை ஊக்கப்படுத்தும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் குடிக்கவும். இது வயிற்றில் ஏற்படும் செரிமான கோளாறுகளையும் சரிப்படுத்தும்.
3. பெருஞ்சீரகம்
பெருஞ்சீரகம் விதைகள் அஜீரணம் மற்றும் வீக்கத்திற்கு நிவாரணம் தருகிறது. ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகளை சாப்பிட்ட பின்னர் வெறும் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இது கஷ்டமாக இருந்தால் வெந்நீரில் ஊற வைத்து பெருஞ்சீரகம் தேநீராகவும் குடிக்கலாம்.
4. எலுமிச்சை நீர்
எலுமிச்சைப்பழம் நச்சு நீக்கும் பண்பு கொண்டது. வயிற்றில் கோளாறுகள் ஏற்படும் போது எலுமிச்சைப்பழ டீ குடிக்கலாம். இது செரிமானத்தை சீர்ப்படுத்தும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சையை பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். அதுவும் மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணும்.
5. மிளகுக்கீரை தேநீர்
மிளகுக்கீரை வாயு மற்றும் வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. மழைக்காலங்களில் மிளகு கொஞ்சம் அதிகமாக போட்டு ரசம் வைத்து குடிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். அல்லது ஒரு கப் பெப்பர்மின்ட் டீயைக் காய்ச்சி, உணவுக்குப் பிறகு குடித்து வர வேண்டும்.
6. மோர்
தொற்றுகள் மற்றும் அசுத்தமான நீர் பாவணையாவல் செரிமான பிரச்சனைகள் வரலாம். ஒரு சிட்டிகை வறுத்த சீரகப் பொடி அல்லது கருப்பு உப்புடன் உட்கொள்ளலாம். இது வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் சரிச் செய்யும்.
7. இலவங்கப்பட்டை டீ
இலவங்கப்பட்டை ஆண்டிமைக்ரோபியல் பண்பு கொண்டுள்ளது. இது நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடக் கூடிய மூலிகை பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. உங்கள் தேநீரில் ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை போட்டு காய்ச்சி குடிக்கலாம். இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |