கால் ஆணி மீண்டும் மீண்டும் வராமல் இருக்க இந்த இயற்கை பொருட்களை இப்படி பயன்படுத்துங்க!
கால் ஆணி என்பது கடினமான தோலின் பகுதி ஆகும். இதற்கு உதவும் எளிமையான வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் அதிலிருந்து பால் வரும். இந்த பாலை அப்படியே எடுத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வர வேண்டும்.
ஒரே நாளில் ஒரு முறை தடவினால் குணம் கிடைக்காது. கால் ஆணி இருக்கும் இடத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முதலில் அந்த இடத்தில் வலி உணர்வு குறையும்.
பிறகு படிப்படியாக கால் ஆணி குணமாகும்.
மருதாணியும் மஞ்சளும்
மருதாணி இலையுடன் மஞ்சள் கலந்து பயன்படுத்தினால் கால் ஆணி குறையும். மருதாணி இலையை ஒரு கைப்பிடி எடுத்து காம்புகள் எல்லாம் நீக்கி சுத்தமாக அலசி எடுக்கவும். மஞ்சள் கிழங்கை நன்றாக கழுவி அதையும் மருதாணியுடன் சேர்த்து அரைக்கவும்.
சிறு நெல்லியளவு உருட்டி கால் ஆணி இருக்கும் இடத்தில் வைத்து அதன் மேல் மெல்லிய வெள்ளை துணியை கட்டி விடவும். மறுநாள் காலை எடுத்து மிதமான உப்பு நீரில் வைத்து சுத்தம் செய்யவும்.
கொடி வேலி
நாட்டு மருந்து கடைகளில் கொடிவேலி பட்டை கிடைக்கும். சித்திர மூலம் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த வேர்ப்பட்டையை வாங்கி வந்து தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு வேர்ப்பட்டையை அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து கால் ஆணி மீது வைக்கவும். சிலருக்கு இது புண்ணை உண்டாக்கலாம்.
ஆனால் அதற்காக இதை தவிர்க்க வேண்டாம். விளக்கெண்ணெயில் மஞ்சள் குழைத்து அதன் மேல் பூசி வந்தால் புண் ஆறக்கூடும். பிறகு கால் ஆணியும் குணமாகும்.
வசம்பு
பிள்ளை வளர்த்தி என்று சொல்லகூடிய வசம்பை கொண்டு கால் ஆணி இருக்கும் இடத்தில் பற்று போடுவதன் மூலம் கால் ஆணி தவிர்க்கப்படலாம்.
மஞ்சள் உடன் வசம்பு, மருதாணி கலந்து தண்ணீர் விட்டு அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் அடைபோல் கனமாக தட்டி அதன் மேல் கருப்பு வெற்றிலையை வைத்து வெள்ளை துணியை கொண்டு கட்டி விடவும்.
தினமும் படுக்கும் முன்பு இதை செய்து வந்தால் கால் ஆணி மறையக்கூடும்.