பேரிச்சம்பழத்தில் அல்வா செய்து சாப்பிடதுண்டா?
இரும்புச் சத்துக்கள் நிறைந்த ஒரு பழம் என்றால் பேரீச்சம்பழம் தான். இதை அதிகளவானவர்கள் விரும்பி உண்ணுவார்கள்.
அதே போன்று அல்வா என்றாலும் அனைவருக்கும் பிடித்ததே.
பேரீச்சம்பழத்தை வைத்து அல்வா செய்து சாப்பிட்டுள்ளீர்களா?
இது சுவையான மற்றும் ஆரோக்கியமானதாக காணப்படுகின்றது. இலகுவான முறையில் வீட்டில் இருந்தப்படியே எவ்வாறு பேரிச்சம்பழ அல்வா செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேவையான அளவு நெய்
-
2 கப் பாதாம் பருப்பு
- 400 கிராம் பேரீச்சம்பழம்
-
தேவையான அளவு தண்ணீர்
- ¼ கப் சோள மாவு
செய்முறை
ஒரு பாத்திரத்தை எடுத்து 1 தேக்கரண்டி நெய்யினை ஊற்றி்கொள்ளுங்கள்.
பின் 2 கப் பாதாம் பருப்பினை எடுத்து அது பொன்னிறமாகும் வரை பொறித்துக்கொள்ளுங்கள்.
அடுப்பை அணைத்து விட்டு ,தனியாக பாதாம் பருப்பை எடுத்து அது ஆறியதும் பொடி பண்ணி வையுங்கள்.
400 கிராம் பேரீச்சையை விதையை நீக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
பேரீச்சையை கடாயில் சேர்த்து அடுப்பை ஒன் செய்து 1 1/2 கப் தண்ணீரை சேர்த்து கொள்வோம்.
பின் கிளறிவிட்டு கொள்ளுங்கள், பேரீச்சை நன்றாக மிருதுவாக வந்ததும் தண்ணீர் வற்றியபின் 2 மேசைக்கரண்டி நெய்யை சேர்த்துக்கொள்ளுங்கள்.
(¼ கப் சோள மாவு + ½ கப் தண்ணீர்) சேர்த்த கலவையை பேரீச்சை கலவையோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
நன்றாக திக்கான பதத்திற்கு வரும்வரை கலந்துகொண்டே இருங்கள்.
பசை போன்ற பதத்திற்கு வந்தபின் 1 தேக்கரண்டி ஏலக்காய் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அது நன்றாக பேஸ்ட் போல வந்தபின் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்த 2 மேசக்கரண்டி நெய்யினை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அல்வாவை செட் பண்ணவிருக்கும் தட்டில் நெய் சேரத்துக்கொள்ளுங்கள்.
திக்காக பசை போன்று வந்தபின் தட்டில் போட்டு ஆற விடுங்கள். சுவையான அல்வா தயார்!