திருமணத்தை தள்ளிப்போடுவது ஏன்? பயத்தை வெளிப்படையாக கூறிய சிம்பு
வெந்து தணிந்தது காடு படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியக உள்ள நடிகர் சிம்பு, சமீபத்திய பேட்டியில் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணத்தை ஓப்பனாக சொல்லி உள்ளார்.
நடிகர் சிம்பு
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, தனது தந்தையை போல் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருகிறார்.
சிறுவயதில் இருந்தே நடித்து வரும் சிம்பு, தற்போது வயது 39 ஆகிறது. இருப்பினும் அவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
பல நடிகைகளுடன் சர்ச்சையில் சிக்குவது மட்டுமின்றி அடுத்தடுத்து ஏற்பட்ட சிம்புவின் காதல் தோல்வி ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டது.
உடல் எடை அதிகரித்ததன் காரணமாக சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு, தற்போது ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறிய பின் மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார்.
திருமணம் குறித்த ஓபன் டாக்
தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இதில் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் சிம்பு. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணத்தை தள்ளிப்போடுவதற்கான காரணம் என்ன என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிம்பு, சமீபகாலமாக எனது திருமணம் பற்றி நிறைய கேள்விகள் வ்ருகின்றன. நான் அவரை காதலிக்கிறேன், இவரை திருமணம் செஞ்சுகிட்டேன் என்றெல்லாம் கூட பரப்புகிறார்கள்.
நான் 19 வயசுல இருந்தே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன். மகனை திருமணகோலத்தில் பார்க்கனும்னு எல்லா பெற்றோருக்கும் ஆசை இருக்கும், அதேபோல் தான் எனது தாய், தந்தையும் விரும்புகிறார்கள்.
ஆனால் எனக்குத்தான் திருமணம் செய்துகொள்ள சற்று பயமாக உள்ளது. அவசர அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கப்புறம் கருத்து வேறுபாடு, சண்டை, விவாகரத்து என்று பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்கிற பயத்தால்தான் நான் திருமணத்தை தள்ளிப்போடுகிறேன்.
எனக்கான சரியான துணை வரும் வரை காத்திருக்கலாம் என்று நான் முடிவு பண்ணிருக்கேன்” என சிம்பு கூறி உள்ளார்.