பட்டுப்புடவை புதுசா வாங்கியது போல இருக்கனுமா? இதோ சூப்பர் ஐடியா
பட்டுச்சோலைகளை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியது போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.
ஆசையாய் பார்த்து பார்த்து அதிக விலை கொடுத்து பட்டு சேலைகளை வாங்குகிறோம்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்குத்தான் அச்சேலைகளை நாம் உடுத்துகிறோம்.
எனவேதான் பட்டுச்சேலைகளை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருக்க வேண்டும்.
பட்டுச்சேலை பராமரிப்பது என்பதே ஒரு கலைதான்.
அவற்றை தோய்ப்பது, காய வைப்பது, மடிப்பது என்று ஒவ்வொன்றையும் கவனமாக கருத்தோடு செய்தால் தான் பல வருடங்களுக்கு அச்சேலைகளை புதியதுபோல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும்.
சரிகை அதிகமுள்ள புடவையாக இருந்தால் ஜரிகை உட்புறம் இருக்குமாறு மடித்து வைக்க வேண்டும். இல்லையென்றால் ஜரிகையின் உலோகம் காற்று பட்டு மங்கிவிடும்.
பட்டு புடவைகளை உடுத்தி முடித்த உடன் ஒவ்வொரு முறையும் தோய்க்க வேண்டிய அவசியமில்லை.
நன்றாக காற்றாட போட்டு வைத்து மடித்து வைக்கலாம். ட்ரை க்ளினிங் கொடுத்து வாங்கி வைத்துக் கொள்வதும் சிறந்தது.
வீட்டில் துவைப்பதை முடிந்தவரை தவிர்ப்பது ஜரிகை அதிகமுள்ள புடவைகளுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட நிறங்கள் கொண்ட புடவைகளுக்கும் நல்லது.