உங்களுக்கே தெரியாமல் 'சைலண்ட் ஹார்ட் அட்டேக்' வரலாம்...அதற்கான அறிகுறிகள் இதோ!
கடுமையான நோய்களில் இதய நோயும் ஒன்று. பொதுவாக அனைவருக்குமே மாரடைப்பு ஏற்படுவது சகஜமாகிவிட்டது. ஆனால், சைலண்ட் ஹார்ட் அட்டாக் எனும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் சாதாரண மாரடைப்புக்கான எந்தவொரு அறிகுறியையும் இது வெளிக்காட்டாது. இரைப்பையில் அசௌகரியம் ஏற்படுவது போல், சாதாரணமாகத் தெரியும்.
இருந்தாலும் அதை பெரும்பாலும் வாயுப் பிரச்சினை என்றே அனைவரும் கருதுகிறார்கள். பெண்களுக்குத்தான் சைலண்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் இலகுவாக காட்டாது. இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவது, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு ஒட்சிசன் பற்றாக்குறை நிலவுவதைப் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டாமலேயே மாரடைப்பு ஏற்படக்கூடும்.
சைலண்ட் ஹார்ட் அட்டாக்கை எப்படி கண்டறிவது?
மார்பின் நடுப்பகுதியிலோ அல்லது வயிற்றின் மேல் பகுதியிலோ இதுவரை இல்லாத அளவுக்கு வலியோ, அறிகுறிகளோ 25 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
ஈ.சி.ஜி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இதுவே நோய் பாதிப்புக்கான அறிகுறிகளை கண்டறிய உதவும். டிரோபோனின் ஐபுரோடீன் எனப்படும் புரதங்கள் இதயத் தசை சேதமடைவதை சுட்டிக்காட்டும்.
இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் அது இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்களை வெளிக்காட்டும் எச்சரிக்கையாக காணப்படுகிறது.
image - emergency physicians
எவ்வாறு தடுக்கலாம்?
உடல் பருமன் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரோல் பாதிப்பு உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து தொழில் புரிபவர்கள், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு உள்ள குடும்பப் பின்னணியில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
35 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒருமுறையாவது இதயப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முதல் முறை சைலண்ட் அட்டாக் ஏற்பட்டால் அதை கவனத்தில் எடுக்காமல் கடந்து சென்றுவிட்டால், அடுத்த முறை அது கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே கவனமாக இருக்க வேண்டும்.
image - ishn.com