வாயுத் தொல்லையா.... ஆயுர்வேதம் தரும் தீர்வு இதோ
இப்போது அனைவருக்குமே இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், வாயுத் தொல்லைதான். எப்பொழுதுமே வயிற்றை அரைப் பங்கு உணவு, கால் பங்கு நீர், கால் பங்கு வெற்றிடமாக வைப்பதே சிறந்தது. சரி எதனால் இந்த வாயுப் பிரச்சினை ஏற்படுகின்றது எனப் பார்ப்போம்...
நேரம் தவறிச் சாப்பிடுதல், நேரம் தவறி உறங்குதல், முறையற்ற உணவுப் பழக்கம் என்பவற்றால் வாயுப் பிரச்சினை ஏற்படும்.
அதுமட்டுமின்றி இனிப்பு, கார வகை பலகாரங்கள் உண்பது, பொரித்த உணவுகள் உண்ணுதல், எண்ணெய், நெய் என்பவற்றை சேர்த்துக் கொள்ளல், புகைப்பழக்கம் என்பவற்றாலும் வாயுத் தொல்லை ஏற்படக்கூடும்.
இரத்தத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், உணவுப்பாதை சுத்தம் இல்லாமல் இருந்தாலும் வாயுத்தொல்லை ஏற்படும். நாள்பட்ட வயிற்றுப் புண், மலச்சிக்கல் போன்றனவும் வாயுத்தொல்லைக்கு காரணமாகலாம்.
தீர்வு
சரியாக ஜீரணமாகாமை, வாயுத்தொல்லை, பசியின்மை போன்ற பிரச்சினைகளுக்கு ஏலக்காய், சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியன கலந்த பஞ்ச தீபாக்கினி சூரண மாத்திரையை ஒன்று வீதம் உணவு உண்பதற்கு முன்போ பின்போ எடுத்துக் கொள்ளவும்.
ஓமநீரை மூன்று வேளையும் 10 மி.லி உண்ணலாம்.
அஸ்வகந்தி மற்றும் இஞ்சி லேகியத்தை 5 கிராம் வீதம் காலை மற்றும் இரவு உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.
மலக்கட்டு இருக்கும்போது திரிபலா சூரண மாத்திரையை காலை, மாலை இரவு நேரத்தில் எடுக்க வேண்டும்.