இதய நோயாளிகள் நண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? அலட்சியம் வேண்டாம்
உலகம் முழுவதும் அதிக மருத்துவ மரணங்கள் ஏற்பட காரணம் இதய நோய் மட்டும்தான். அதிக கொழுப்பானது இதய நோயுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்கிறது.
சொல்லப்போனால் இதய நோயும், அதிக கொழுப்பும் இரட்டை குழந்தைகள் போன்றவர்கள். கொழுப்பு உடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை தெரிந்து கொள்ளும் முன் கொழுப்பு என்றால் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
கொழுப்பு என்பது கல்லீரலில் இருந்து உற்பத்தி செய்யப்படுவது, இது நமது இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் செல்லும் கொழுப்பு நிறைந்த பொருள்.
இதுதான் உடலுக்கு தேவையான வைட்டமின்களை பெற உதவுவதோடு, உணவுகளை உடைப்பதுடன் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உதவி செய்யும். இதனை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என்று வகைப்படுத்தலாம்.
கடல் உணவுகள்
கொழுப்பு அளவுகள் என்று வரும்போது கடல் உணவுகள் மோசமான பெயரை கொண்டுள்ளது.
ஆனால் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அது உண்மையில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
கடல் உணவுகளில் அதிகளவு கொழுப்பு இருந்தாலும் அவை முழுமையாக ஆரோக்கியமற்ற உணவு என்று கூறிவிட முடியாது.
ஏனெனில் இதில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றவை என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இந்த உணவுகளை மிதமான அளவில் சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு பாதுகாப்பைத்தான் அளிக்கும். நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கும்.
நமது உடல் இந்த கொழுப்பு பொருட்களை தானாக உற்பத்தி செய்து கொள்ளும். நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளுமே கொழுப்பு அளவை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ உதவி செய்யும்.
கொழுப்பு இல்லாத டயட்
- இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க கொழுப்பு குறைவான அளவில் இருக்க வேண்டியது முக்கியம்.
- இந்த சூழ்நிலையில் நண்டு, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
- ஆனால் ஆய்வுகளின் படி இந்த வகை கடல் உணவுகளில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்கள் இருப்பதுடன் அமினோ அமிலங்களும், ஒமேகா 3 அமிலமும் இருக்கிறது.
- இது உங்கள் LDL கொழுப்பு அளவை குறைத்து இதயத்தை பாதுகாக்கும்.