புதுமனை குடி புகுந்த சின்னதிரை பிரபலம் - கண்ணீருடன் வெளியிட்ட காணொளி
சொந்த உழைப்பில் ஒரு சொந்த வீடு வாங்க யாருக்கு தான் கனவு இருக்காது. அந்த கனவு நனவாகிய சின்னதிரை பிரபலத்தில் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பொதுவாக ஒரே சீரியலில்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் போது ஒரு சிலர் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்கள். ஆனால் அது எல்லோருக்கும் வெற்றியாக அமைந்ததில்லை.
அவர்களில் ஒரு சிலர் மட்டும்தான் தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய்க் கொண்டிருக்கின்றனர்.

அந்த பட்டியலில் பிரபல சின்னத்திரை ஜோடி ஷ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து ஆகியோர் தங்கள் திருமண வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி. இவர்கள் இருவரும் பல வருட போராட்டத்திற்கு பிறகு சொந்தமாக வீடு கட்டி பால் காய்ச்சி இருக்கிறார்கள்.
அது குறித்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவில் ஷ்ரேயா அஞ்சன் பால் பொங்கும் சமயத்தில் கண்ணீர் விட்டு அழுகின்றார். இதற்கு ரசிகர்கள் பாராட்டு கூறி நெட்டிசன்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |