சக்தி நம்ம ரத்தம் இல்ல.. சவப்பெட்டியில் வைக்கப்பட்ட உடல்- தேவகியின் சாபமா இது?
எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகனாக சக்தி குணசேகரன் தம்பி அல்ல என தெரிய வரும் சமயத்தில் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் ஜனனி பார்வைக்கு படுகிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக செல்லும் சீரியல் போன்று அல்லாமல் குறித்த சீரியலின் கதைகளம் சற்று வித்தியாசமாக செல்கின்றது.
தர்ஷன் திருமணத்தில் ஆரம்பித்த அதிரடி ஆட்டம் சக்தி கொலைச் செய்யும் அளவுக்கு விறுவிறுப்பாக நகர்த்தப்படுகிறது.

சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மைகளை திரட்டிக் கொண்டு வரும் வேளையில், குணசேகரன் அனுப்பிய ஆட்கள் சக்தியை கடத்திச் சென்று வைத்திருக்கிறார்கள். அத்துடன் நிறுத்தாமல் சக்தியை தேடிச் செல்லும் ஜனனியையும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
தேவகி மகன் சக்தியா?
இந்த நிலையில், கோவிலில் முகாமில் குணசேகரன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, ஞானம் சக்தியை பற்றி விசாரிக்கிறார். அப்போது மிகப் பெரிய உண்மை வெளியில் வருகிறது.
அதாவது, குணசேகரனின் கடைசி தம்பியான சக்தி உண்மையில் குணசேகரன் அம்மாவிற்கு பிறந்தவர் அல்ல. சிறுவயதில் தன்னுடைய அம்மாவை பறிக் கொடுத்து விட்டு, குணசேகரனால் தனிமைப்படுத்தப்பட்ட ராணா என்பது தெளிவாகிறது.

குணசேகரன் சொத்து என கொண்டாடப்படும் சொத்துக்கள் அனைத்திற்கும் ஒரே சொந்தக்காரர் சக்தி தான். இதனால் சொத்துகளுக்கு பிரச்சினை வந்து விடும் என்ற பயத்தில் சக்தியை தனது தம்பியாக வைத்து குணசேகரன் பார்த்து வந்துள்ளார்.
உண்மை வெளியில் வரும் சமயத்தில் தன்னுடைய சொத்து தன்னை விட்டு போய் விடும் என்ற பயத்தில் சக்தியை ஆள் வைத்து கொலைச் செய்ய முயற்சிக்கிறார்.
இந்த உண்மைகளை ஜனனி தெரிந்து கொண்டால் பிரச்சினை என கணித்த குணசேகரன் இருவரையும் கொலைச் செய்ய ஆட்களை அனுப்பியுள்ளார்.
குணசேகரன் ஆட்டத்திற்கு என்ன முடிவு என்பதை இனி வரும் எபிசோட்களில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |