Kitchen Tips: பால் டீ போடும் போது இந்த தவறை மட்டும் எப்போதும் செய்யாதீங்க
பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபி குடித்து விட்டு தான் அன்றைய நாளை ஆரம்பிப்பார்கள்.
இந்த பழக்கம் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல வெளியில் சென்றாலும் முதலில் டீ அருந்திய பின்னரே மற்ற வேலைகளை பார்ப்பார்கள்.
அந்த அளவில் இந்தியர்களின் ஒரு பாரம்பரிய பானமாக டீ மாறியுள்ளது. இதில் பால் போட்டு குடிக்க நிறைய பேர் விரும்புவார்கள்.
காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ குடித்தால் தேவையில்லாத மன அழுத்தத்தில் இருந்து விடுவிப்பதோடு, புத்துணர்ச்சி அளிக்கும் வேலையையும் இது செய்கிறது.
இவ்வளவு சிறப்பு கொண்ட டீயை எப்படி சுவையான பானமாக மாற்றுவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
டீ சுவையாக இல்லையா?
1. பால் டீ போடும் பொழுது அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. இவ்வாறு செய்தால் பாலிலுள்ள கால்சியம், புரோட்டீன், வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அழிந்து விடும். மேலும் பால் டீயை அதிகமாக சூடுபடுத்தும் பொழுது பாலில் உள்ள வைட்டமின் பி12 கணிசமாக குறைந்து விடும். இதனால் உரிய வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்காமலே போய் விடும்.
2. பால் கலந்த டீயை அடுப்பில் வைத்து அதிக நேரம் கொதிக்க விடும் பொழுது அதன் இயற்கையான சுவை மாறிவிடும். டீத்தூளில் இருக்கும் சாயம் டீயில் அதிகமாக இறங்கி கசப்பு சுவையை தரும்.
3. டீயின் நிறம் மாறி காணப்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நீங்கள் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். சிலர் டீயின் நிறத்தை வைத்து அந்த டீயின் சுவையை கூறுவார்கள். இது போன்ற நேரங்களில் மிகக்கவனமாக டீ போட வேண்டும்.
4. பால் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருக்கும். அதிகமாக கொதிக்க வைக்கும் பொழுது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அளவு குறைந்து விடும். மன அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் டீயை சரியான அளவு போட்டு குடித்தால் ஓரளவு நிவாரணம் பெறலாம்.
5. சிலருக்கு காலை எழுந்தவுடன் டீ குடித்தால் மலம் வெளியேறும். இதற்கான முக்கிய காரணம் டீயில் இருக்கும் ஊட்டசத்துக்கள் ஜீரணத்தை இலகுப்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |