கத்திரிக்காய் கார குழம்பு... இனிமேல் இப்படி செய்ங்க சுவை அட்டகாசமா இருக்கும்
பொதுவாக கத்தரிக்காய் வைத்து தொக்கு, புலாவ், குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும்.
இன்று காரசாரமான புளிப்பான கத்தரிக்கய் கார குழம்பை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 4
நல்லெண்ணெய் - 4
கடுகு - 1மேசைக்கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
வெந்தயம் - 1/2தே.கரண்டி
காய்ந்த மிளகாய் -2
வெங்காயம் - 1 கறிவேப்பிலை
சின்ன வெங்காயம் - 25
பூண்டு - 25
தக்காளி - 1
உப்பு - 2 தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
தனியா தூள் - 2 தே.கரண்டி
சாம்பார் பொடி - 2 தே.கரண்டி
தண்ணீர் புளி கரைசல் - 1 கப்
வெல்லம் - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 நிமிடம் வரை நன்றாக வதக்க வேண்டும்.
பிறகு கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சாம்பார் பொடி சேர்த்து கலந்துவிடவும். பின்பு தண்ணீர் ஊற்றி மசாலாவை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேகவிட வேண்டும்.
அடுத்து புளி கரைசல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பின்னர் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
இறுதியாக வெல்லம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து இறக்கினால் மணமணக்கும் சுவையில் கத்தரிக்காய் காரக்குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |