சூடான சாதத்திற்கு மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு - 2 நிமிஷத்துல செய்வது எப்படி?
பொதுவாக அநேகமான வீடுகளில் அவசரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் அடிக்கடி சாம்பாரே வைப்பார்கள்.
இப்படியான நேரங்களில் புளிக்குழம்பு நமக்கு கை கொடுக்கும்.
அந்த வகையில், சூடான சாதத்திற்கு மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு வைப்பது எப்படி? என தொடர்ந்து பதில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* மொச்சைக்கொட்டை - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* பூண்டு - 15 பல்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் கீறியது)
* முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலாவுக்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 8
* பூண்டு - 10 பல்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
புளிக்குழம்பு செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் மொச்சைக்கொட்டைகளை போட்டு நிறம் மாறும் வரை வறுத்து கொள்ளவும்.
பிறகு லேசாக தண்ணீரில் அலசி எடுத்து குக்கரில் போட்டு சரியாக 300 மி.லீ நீர் விட்டு 7-8 விசில் வைத்து வேக வைக்கவும்.
இதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் அதில் மசாலாவிற்கு தேவையான பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.
தாளித்தவைகளை சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு மெதுவாக அரைத்து கொள்ளவும். அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிப்புக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு, பச்சை வாசம் போகும் வரை வதங்க விடவும்.
தாளிப்பு சரியான பதத்திற்கு வந்தவுடன் தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய் மசாலா ஆகியவற்றை ஒன்றாக போட்டு கிளறவும்.
சரியாக 2 நிமிடங்களுக்கு பின்னர் 2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து 5-8 நிமிடங்கள் மூடி போட்டு குழம்பை வேக வைக்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும், மொச்சைக்கொட்டை, புளிச்சாறு இரண்டும் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான மொச்சைக்கொட்டை புளிக்குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |