இந்த பிரச்சினைகள் இருக்கா? அப்போ தவறியும் எலுமிச்சை சாப்பிடாதீங்க
எலுமிச்சை வைட்டமின் சி இன் சிறந்த ஆதாரங்களில் ஒன்றான காணப்படுகின்றது. இந்த பழம் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானதாக அறியப்படுகிறது.
எலுமிச்சையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும் குறிப்பிட்ட சில பிரச்சினை உள்ளவர்களுக்கு இது தீங்கு விளைவிக்கும். யாரெல்லாம் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
யாரெல்லாம் சாப்பிட கூடாது?
வயிற்றுப் புண்கள் மற்றும் செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். காரணம் இதில் அதிகளவு அமிலத்தன்மை நிறைந்திருக்கின்றது.
எலுமிச்சை சாறு அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உங்கள் பற்களில் கூச்ச உணர்வை ஏற்படுத்தும். இது மேலும் காலப்போக்கில் பற்சிப்பியில் சிதைவை ஏற்படுத்தும். எனவே பற்கூச்சம் கொண்டவர்கள் தவறியும் எலுமிச்சை சாப்பிட கூடாது.
குறிப்பிட்ட சிலருக்கும் மிகவும் அரிதாக சிட்ரஸ் ஒவ்வாமை எனும் அரிய நோய் காணப்படுகின்றது .இவர்கள் ஒருபோதும் எலுமிச்சை சாப்பிடவே கூடாது.
சிட்ரஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு லேசான அரிப்பு அல்லது படை போன்ற அறிகுறிகளும் உதடுகள், நாக்கு அல்லது தொண்டை வீக்கம் போன்ற அறிகுறிகளும் காணப்படும். இவர்கள் எலுமிச்சை சாறு கலந்த உணவுகளை முற்றாக தவிர்ப்பது நல்லது.
சிறுநீரக கற்கள், இதய நோய் பாதிப்புள்ளவர்கள் மற்றும் வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எலுமிச்சை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |