ஆண்களே உஷார்!.. சிறுநீரகத்தை சேதப்படுத்தி புற்றுநோயை உண்டு பண்ணும் தவறுகள்
பொதுவாக உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான மக்கள் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புள்ளி விவரங்களின் படி, உலகளவில் புற்றுநோயின் வகைகளில் சிறுநீரக புற்றுநோயானது 14 ஆவது இடத்தில் இருக்கிறது.
நாம் அனைவரும் கண்டு மிரண்டு போகும் சிறுநீரக புற்றுநோயானது சிறுநீரகங்களில் உள்ள செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி அடையும் போது ஏற்படுகிறது.
இந்த நோயின் தாக்கத்தினால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் இரத்தம் மற்றும் பிற அறிகுறிகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான காரணங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக புற்றுநோயிற்கான காரணங்கள்
1. ஃபாஸ்ட் புட், ஜங்க் புட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடும் பொழுது சோடியம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை அதிக அளவு உடலில் சேருகின்றன. இதனால் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் இடையூறை ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படும். இது காலப்போக்கில் புற்றுநோயாக மாறும்.
2. இன்று பலர் தலைவலி, கால்வலி, வயிற்று வலி போன்ற நோய்நிலைமைகள் ஏற்பட்டால் மருத்துவரின் பரிந்துரைகள் இல்லாமல் மருந்துகள் எடுத்து கொள்வார்கள். இவ்வாறு தாமாகவே வாங்கும் மாத்திரைகள் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுத்துவதோடு, சிறுநீரகங்களில் அதிகப்படியான அழுத்தத்தை கொடுத்து புற்றுநோய் வர வாய்ப்பை உருவாக்கும்.
3. உணவில் அதிகப்படியான உப்பு சேர்த்து சாப்பிட்டால் இதிலுள்ள சோடியம் சிறுநீரகத்தின் சமநிலையை சீர்குலையச் செய்யும். இதனால் உடலில் இருந்து சிறுநீர் வெளியேற்றப்படாமல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
4. உடல் ஆரோக்கியத்திற்கு உணவு போல் நீரும் அவசியம். குறிப்பாக சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் போதுமான அளவு நீரை தினமும் குடிக்க வேண்டும். சிறுநீரகங்கள் நல்ல நீரேற்றம் இருந்தால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படும். இது தேங்கும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்படலாம்.
5. சிலருக்கு பல்வேறுப்பட்ட காரணங்களால் மது அருந்தும் பழக்கம் இருக்கும். இது ஒரு நாள் அதிகரிக்கும் பட்சத்தில் சிறுநீரக நோயின் அபாயம் அதிகரிக்கும். முடிந்தவரை இது போன்ற பழக்கங்களை குறைப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |