பிசைந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முறையான உணவுப் பழக்கம் மிகவும் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
தற்காலத்தில் உட்கார்ந்த இடத்திலேயே பல மணிநேரங்கள் வேலை பார்க்கும் வாழ்க்கை முறை தான் அதிகமாகிவிட்டது.இது உடல் ஆரோக்கித்தை பெரிதும் பாதிக்கின்றது.
அத்துடன் முறையற்ற உணவுப் பழக்கம் ஆகியவை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே தினமும் ஆரோக்கியமான சமச்சீரான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக மழை காலத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் மெட்டபாலிசம் மந்தமாகி, இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது.
எனவே, இந்த பருவத்தில் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது தவிர இந்த சீசனில் பலரும் பிசைந்த மாவை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பின்னர் பயன்படுத்துவார்கள். ஆனால், இதைச் செய்யவே கூடாது.
இது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. அத்தகைய தவறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தை கெடுப்பதுடன் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
ஃப்ரிட்ஜில் வைப்பதன் பாதக விளைவுகள்
பிசைந்த மாவு கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஃப்ரிட்ஜில் சேமிப்பார்கள். ஆனால் மழையில் பிசைந்த மாவில் பாக்டீரியா வளரும். இது மட்டுமின்றி, சில பாக்டீரியாக்கள் உணவு ஒவ்வாமை போன்ற கடுமையான பிரச்சினைகளை உண்டாக்கும்.
இது தவிர, இந்த மாவில் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
எனவே பிசைந்த மாவை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் உடனே அதை மாற்றிவிடுங்கள்.
குறிப்பாக மழைக்காலத்தில் தவறுதலாக கூட இதை செய்யாதீர்கள்.உண்மையில், சில பாக்டீரியாக்கள் குறைந்த வெப்பநிலையில் வளர்கின்றன, இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் அறிவியல் ரீதியாக நிரூபித்துள்ளது.
மழைக்காலத்தில், லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் என்ற பாக்டீரியா பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது. மேலும் குளிர்சாதன பெட்டியின் குறைந்த வெப்பநிலையில் எளிதாக வளரும்.
எனவே, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவு பொருட்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் ஃபிரிட்ஜில் வைக்காமல் புதிதாக பிசைந்த மாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |